திருச்சி கிளையில், திருட்டில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருச்சி: லலிதா ஜூவல்லரி திருச்சி கிளையில், திருட்டில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான வைர நகைகளை முகமூடி அணிந்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இரவு நேரத்தில், நகைக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றனர். கொள்ளையர்கள் சுவரை துளையிட்டு நகைகளை, பேக்குகளில் அள்ளி செல்லும் சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்ட துணை கமிஷனர் மயில்வாகனன் விசாரணை நடத்தினார். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய மூன்று தனிப்படைகளும் கொள்ளையர்களை தேடும் பணியில் நான்கு தனிப்படைகளும் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வடமாநில கொள்ளையர்கள்: விசாரணையில், நகைகடையில் கொள்ளையடித்தது வடமாநில கொள்ளையர்கள் தான் என போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த 5 நபர்கள், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கோவையில் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்ததாகவும், அவர்களிடம் 6 பைகள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் கேஸ் வெல்டிங்கிற்கான ரசீது வைத்திருந்ததாகவும், கேஸ் வெல்டிங்கிற்கு சிலிண்டர்களை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழுக்களாக பிரிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனரா எனவும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்