திடீரென நேரில் வந்து கேட்ட அதிமுக.. டக்குன்னு ஓகே சொன்ன பாஜக!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை நிச்சயம் வெற்றி பெறுவார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பள்ளியில் பசுமை என்கிற பெயரில் மரம் நடும் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, உரையாற்றினார். மூன்றாம் உலகப்போர் என ஒன்று வந்தால், அது நிச்சயம் குடிநீருக்காக மட்டுமே தான் வரும் என்றார். குடிநீருக்காக நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் அபாய நிலை தான் தற்போது உள்ளது என்றும், மழை நீரை சேமிப்போம் என்கிற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மரம் நடும் பண்பாட்டை மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் பசுமை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார். மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும் அவர்களை வரவேற்பது என்பது தமிழர் பண்பாடு என்றும், நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் பேனர் வைக்கப்படும் என்றும் கூறினார். என்ன தோப்புக் கரணம் போட்டாலும், பல்டி அடித்தாலும் கமலால் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அதிமுக அரசை விமர்சித்து காலத்தை கடத்தி விடலாம் என கமல் நினைப்பதாகவும் ஜெயக்குமார் பதிலளித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்