சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீரின் அளவு உயர்வு..!

கடந்த இரண்டு நாளாக பெய்து வரும் மழையின் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீரின் அளவு உயர்ந்து வருகிறது. பூண்டி நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 1,177 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தற்போது கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 834 கனஅடி நீர் வீதம் சாய் கால்வாய் வழியாக வந்து கொண்டிருப்பதால், புழல் ஏரிக்கு வினாடிக்கு 440 கன அடி நீர் இணைப்பு கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், தற்போது வெறும் 22 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. சோழவரம் ஏரி, அதன் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் தற்போது 74 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில், தற்போது 249 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக 4 நீர்த்தேக்கங்களிலும் மொத்தமாக ஒன்று புள்ளி 522 டிஎம்சி கொள்ளளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்