ஒரு பெண்ணின் பிரச்சாரம் காரணமாக இருந்ததென்றால் நம்ப முடிகிறதா...? யார் அந்த பெண்..? அவர் செய்த சாதனை என்ன...?

மதுரை அருகே ஐந்தாயிரம் கழிவறைகள் கட்டி முடிப்பதற்கு ஒரு பெண்ணின் பிரச்சாரம் காரணமாக இருந்ததென்றால் நம்ப முடிகிறதா...? யார் அந்த பெண்..? அவர் செய்த சாதனை என்ன...? திறந்தவெளி கழிப்பறையில் இருந்து பாதுகாப்பான கழிவறையை நோக்கி மக்களை கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கில், மத்திய அரசால் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. அதற்காக நாடு முழுவதும் ஊக்குவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊக்குவிப்பாளர் பணியில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற அடையாளத்துடன் மதுரையைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு மத்திய அரசு விருது தந்து கவுரவித்துள்ளது. சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்விக்கு, 11ம் வகுப்பு படித்ததே கல்வி தகுதியாக இருந்தாலும், கிராமம் கிராமமாக அவர் மேற்கொண்ட பிரச்சார பயணத்தின் விளைவாக சுமார் ஐந்தாயிரம் கழிவறைகள் கட்டி முடிக்க அவர் காரணமாகி இருப்பது இன்று மதுரைக்கே பெருமை சேர்த்துள்ளது. செல்வியின் பணியை பாராட்டி திருமங்கலம் வட்டார ஊரக வளர்ச்சி துறையில் தற்காலிக பணியாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையால் தமக்கு விருது கிடைத்திருப்பதை மக்களுக்கு சமர்பிப்பதாக கூறுகிறார் செல்வி. செல்விக்கு விருது கிடைத்திருப்பதை அறிந்து வரவேற்பு தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அவருடைய தொடர் வலியுறுத்தல் காரணமாகவே தாங்களும் கழிவறை கட்டியதாகவும், தங்கள் பகுதியில் நல்ல சுகாதார சூழல் உருவாகியுள்ளதாகவும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர். சுகாதாரமாக இருக்க வேண்டும் என பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதை விட, ஒவ்வொருவரும் செல்வியாக செயல்பட வேண்டும் என்பதே மத்திய மாநில அரசுகளின் விருப்பமாக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்