அடகு கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து துணிகர கொள்ளை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அடகு கடையின் பக்கவாட்டு சுவர் துளையிடப்பட்டு ஒரு கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீர்காழி அடுத்த புத்தூர் கடைவீதியில் ராஜஸ்தானை சேர்ந்த சிவபுரி என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்றிரவு கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு நள்ளிரவில் அடகு கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து துளையிட்ட கொள்ளையர்கள், அதன் வழியாக உள்ளே சென்றுள்ளனர். கடையின் லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். அடகு கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளையர்கள் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் கை ரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. துணிகர கொள்ளை தொடர்பாக கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்