நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு பொருளாதாரம் தெரியாது - சுப்பிரமணிய சாமி

அருண்ஜேட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு பொருளாதாரம் தெரியாது என்றும், தற்போதைய பொருளாதார மந்த நிலையை மாற்ற முடியாது என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜி.எஸ்.டி. என்ற புரியாத வரி கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி ஏழைகளுக்கு சமையல் எரிவாயு, கழிவறைத் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்த வகையில் வீரர் என்ற போதிலும் பொருளாதார மேதைகளை பயன்படுத்த தவறிவிட்டதாக அவர் கூறினர். நரசிம்மராவ், சந்திரசேகர் ஆகியோரின் காலத்தில் பொருளாதார முன்னேற்றம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் தொகுதிகளை பிச்சை வாங்குவதை விட்டுவிட்டு பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு தான் கொடுக்கவில்லை என்றும் பிரதமர் தான்கொடுத்ததாகவும் அவரிடம் சென்று கேட்குமாறும் சுப்பிரமணியசாமி தெரிவித்தார். மத்திய அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பொருளாதார மந்த நிலைக்கு முந்தைய காங்கிரஸ் அரசு முக்கிய காரணம் என்ற அவர், மன்மோகன் சிங் ஆட்சியின் கைகூலியாக இருந்ததாக குற்றம்சாட்டினார். ப.சிதம்பரம் குடும்பத்தினர் அவர்கள் மீது உள்ள வழக்குகளுக்காக 20 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும் என்ற அவர், ப.சிதம்பரத்துக்கு திகார் சிறையில் இருக்க பயமா என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியில் சோனியாகாந்தி, சசிதாரூர், சிதம்பரம் உள்ளிட்ட பலர் சிறைக்குச் செல்ல வேண்டியவர்கள் என்றும், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் விரைவில் திகார் சிறையில் தான் நடைபெறும் என்றும் அவர் கூறினார். ராகுல் காந்தியின் குடியுரிமை ரத்து செய்யப்படும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்