சாலையில் தனியே நடந்து செல்லும் முதியவரைத் தாக்கி வழிப்பறி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 3 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதியவர் ஒருவரைத் தாக்கி செல்போன் பறிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி பகுதியில் தனியே நடந்து செல்வோரிடம் நகைப் பறிப்பு, செல்போன் பறிப்பு, இருசக்கர வாகனத் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் ஆரணி சத்தியமூர்த்தி சாலையில் தனியே நடந்து செல்லும் முதியவரை இருசக்கர வாகனத்தில் வரும் 3 இளைஞர்கள் கடுமையாகத் தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பரபரப்பான சாலையில் முதியவர் என்றும் பாராமல் 3 பேர் சேர்ந்து தாக்குவதை கண்டும் காணாதது போல பலர் கடந்து செல்வது, அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இணையத்தில் இந்தக் காட்சிகள் பரவி வரும் நிலையில், இது தொடர்பான புகார்கள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று கூறும் போலீசார், முதியவர் யார், அவரைத் தாக்கியவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்