மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவச பயணம் - டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்த டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலவசத்தை செயல்படுத்தினால் மெட்ரோ நிர்வாகம் எப்படி லாபகரமானதாக இயங்கும் என்று உச்சநீதிமன்றம் கெஜ்ரிவால் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இழப்பை டெல்லி அரசு ஏற்கத்தயாரா என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. டெல்லி பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஆம் ஆத்மி அரசுக்கு கடுமை காட்டியது. மாநில அரசு என்ற வகையில் மெட்ரோவுக்கு இழப்பு ஏற்படாத வகையில்தான் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்