ஆட்சிக்கு வந்தால் இந்தி.. தேர்தல் நேரத்தில் ஆங்கிலம்.. இது மோடி ஸ்டைல்!

சென்னை: தேர்தல் நேரத்தில் தமிழகத்திற்கு வந்தால் ஆங்கிலத்தில் பேசிய மோடி ஏற்கெனவே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் முதல்முறையாக சென்னை வந்துள்ள அவர் இந்தியில் பேசியதை கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ரயில்நிலையங்களில் இந்தியில் அறிவிப்புகள் கொண்டு வந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதனால் இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டம் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. மேலும் இந்தி திணிப்பு போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் மும்மொழி கொள்கையை கொண்டு வருவதன் மூலம் இந்தியை முக்கிய மொழியாக்கி அந்த மொழியை திணிக்க திட்டம் என கூறி தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் அண்மையில் இந்தி தினத்தையொட்டி இந்தியை நாட்டின் ஒரே மொழியாக கொண்டு வர வேண்டும் என்றும் அப்போதுதான் இந்தியாவுக்கு உலக நாடுகள் முன்பு அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அமித்ஷா டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பு நிலவியது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அமித்ஷாவின் விளக்கத்திற்கு பிறகு அவை திரும்ப பெறப்பட்டன. அமித்ஷா அளித்த விளக்கத்தில் அவர் கூறுகையில் நான் ஒரு போதும் மற்ற மொழிகளின் மீது இந்தியை திணிக்குமாறு கேட்கவில்லை. ஆனால் ஒருவரின் தாய்மொழியைத் தவிர பொதுவான இரண்டாவது மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என தெரிவித்ததாக விளக்கம் அளித்தார். இது போன்ற தமிழகத்தில் இந்தி திணிப்பு மீது கடும் எதிர்ப்பு உள்ள நிலையிலும் மத்திய அரசு இந்திக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையிலும் சென்னைக்கு வந்த மோடி, பாஜகவினர் மத்தியில் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது தேர்தல் பிரசாரம், அப்துல் கலாம் விழா உள்ளிட்ட எந்த விழாவாக இருந்தாலும் தமிழகத்தில் ஆங்கிலத்தில் பேசிய மோடி தற்போது இந்தியில் பேசியுள்ளார். இந்தி திணிப்பிற்கு கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மீண்டும் மீண்டும் இந்தியில் மோடி பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தேர்தல் சமயத்தில் ஆங்கிலத்தில் பேசுவதும் அமெரிக்காவில் தமிழில் பேசுவதும், தமிழகத்திற்கு வந்தால் இந்தியில் பேசுவதும் மோடியின் பலதரப்பட்ட நிலைப்பாட்டை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்