சினிமா பாணியில் காரை திருடிச் சென்ற நபர்கள்..!

சினிமா பாணியில் காரை திருடிச் சென்ற நபர்கள், போலீஸ் விசாரணை நடத்தியதால் சாலையோரம் விட்டு விட்டு தப்பிச் சென்ற சுவையான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. வாகனத்தை ஓட்டிப் பார்த்து வாங்குவதாகக் கூறி, அப்படியே வாகனத்தை திருடிச் செல்லும் திரைப்பட நகைச்சுவை காட்சி வெகு பிரபலம். வடிவேலு நடித்த திரைப்படத்தில் வரும் காட்சியை நினைவுபடுத்தும் வகையில் சென்னையில் கார் திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு ராஜ். இவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த துரை சிங்கம் என்பவர் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் பாபு ராஜ் தனது காரை விற்பது பற்றி கூறியபோது, தான் உதவி செய்வதாக துரை சிங்கம் கூறியுள்ளார். காரை வாங்குவதற்கு தனக்கு தெரிந்த நபர் இருப்பதாக கூறி, தனது மருமகன் பிரதாப் என்பவரை அழைத்து வந்துள்ளார். பாபு ராஜ் விற்க வேண்டிய காருடன் சாலிகிராமம் ஆற்காடு சாலையில் துரைசிங்கத்தை சந்தித்துள்ளார். அப்போது துரை சிங்கமும், அவருடன் வந்த பிரதாப்பும், காரை ஓட்டிப் பார்ப்பதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். ஆனால், நெடுநேரம் ஆகியும் கார் திரும்ப வராததால், செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த பாபு ராஜ் இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவை காட்சி ஒன்றில் வருவது போல, வாகனத்தை ஓட்டி பார்த்து வாங்குவதாக கூறி காரை எடுத்துச் சென்றுள்ளனர். புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார், துரைசிங்கத்தின் செல்பேசி எண்ணை வைத்து முகவரியை கண்டுபிடித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, அச்சத்தில் பிரதாப் மற்றும் துரை சிங்கம் ஆகிய இருவரும் கே.கே நகரில் உள்ள 100 அடி சாலையில் காரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு தகவல் தெரிவித்துவிட்டு ஓடிவிட்டனர். இதை தொடர்ந்து காவல்துறையினர் காரை மீட்டனர். மேலும், காரை கடத்தி செல்ல முயன்ற பிரதாப் மற்றும் துரை சிங்கம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்