நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மனுத்தாக்கல் தொடக்கம்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கும் அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் போட்டியிட நேற்று முதல் விருப்ப மனு வினியோகம் நடந்து வருகிறது. இன்று மாலை வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. திமுகவில் நேற்று விருப்ப மனு வினியோகம் தொடங்கிய நிலையில், வேட்பாளர் நேர்காணல் நாளை நடைபெறுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்