“விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்” - மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் மனு

உள்ளூர் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு அளித்துள்ளார். டெல்லி சென்றுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்.கீழடி அகழாய்வு பணிகள் குறித்து  மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத்தை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் ஆட்சிமொழி செயலாளர் அனுராதா மித்ராவை சந்தித்துப் பேசினார்.இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளரிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு அளித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்