கர்நாடகாவில் மேலும் 2 துணை முதலமைச்சர்களை நியமிக்க திட்டம்

கர்நாடக மாநிலத்தில் தற்போது மூன்று துணை முதலமைச்சர்கள் உள்ள நிலையில் மேலும் 2 பேர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் தற்போது கோவிந்த் கர்ஜோல், லட்சுமண் சவாடி, அஸ்வத் நாராயண் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் முறையே பட்டியலினத்தவர், லிங்கயாத், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போது முதலமைச்சராக இருக்கும் எடியூரப்பா லிங்கயாத் சமூகத்தின் ஒரு பிரிவை சேர்ந்தவர். அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு கர்நாடாக பாஜகவின் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார். இதனால் கர்நாடக பாஜக லிங்கயாத் சமூகத்தின் கட்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள மற்ற சமூகத்தினரையும் கவரும் வகையில் மேலும் 2 சமூகத்தை சேர்ந்தவர்களை துணை முதலமைச்சர்களாக நியமிக்க பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் பழங்குடி மற்றும் குருபா சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த 5 சமூகத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 70 சதவீத மக்கள் தொகை வந்துவிடும். எனவே இதன் மூலம் மாநிலம் முழுவதும் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த 5 பேரில் சிறப்பாக செயல்படுவருக்கு எடியூரப்பாவுக்கு பிறகு தலைமை பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு 17 கர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு பின் வெளியாகும் என கூறப்படுகிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்