இணையதளம் மூலம் வர்த்தக நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி வரை மோசடி...!

கோவையில் ஆன்லைன் மூலம் வர்த்தக நிறுவனம் நடத்தி சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை சாய்பாபா காலனியில் சதீஷ்குமார் - குணவதி தம்பதியர் DMG என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் முதலீட்டாளர்களிடம் மொத்த தொகையாக குறிப்பிட்ட தொகையை வாங்கி, அந்த தொகைக்கு ஏற்றார் போல் தினமும் 100, 200, 500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பி 6000, 12000 ரூபாய் என பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் குறிப்பிட்டப்படி தினமும் பணம் தருவதை அவர்கள் நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சதீஷ்குமார் - குணவதி தம்பதியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்