இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் நடத்தும் வகையில் வாக்குச்சாவடிகளை தயார் செய்வது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பூத்சிலிப் தயாரிக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். மேலும் இது போல் அவ்வப்போது ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துவிட்ட நிலையில், இரு தொகுதிகளுக்கும் பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்