புதுச்சேரியை சேர்ந்த ஒருவரிடம் இ மெயில் மூலம் வெளிநாட்டு நிதி பெற்று தருவதாக கூறி, 42 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது

புதுச்சேரியை சேர்ந்த ஒருவரிடம் இ மெயில் மூலம் வெளிநாட்டு நிதி பெற்று தருவதாக கூறி, 42 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். பொறியியல் பட்டதாரியான இவர் அரவிந்தர் என்ற ஆசிரமத்தில் பணியாற்றி வருகிறார். இவரை கடந்த மே மாதம் இ மெயில் மூலம் தொடர்புக் கொண்ட இருவர், தனியார் வங்கியில் இருந்து பேசுவதாகவும், அமெரிக்காவில் உள்ள International monetary fund மூலம் 78 கோடி ரூபாய் வரை பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். தங்களை பெடரல் வங்கியை சேர்ந்த ரூஸ்தயார், இந்தியன் ரிசர்வ் வங்கியை சேர்ந்த அசோக் பாண்டே என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 42 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் கூறியுள்ளனர். இதை நம்பிய அன்மோல் ஜெயின், 78 கோடி ரூபாய் கிடைக்கும் என்ற நப்பாசையில், 42 லட்சம் ரூபாயை வங்கி கணக்கும் மூலம் அணுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அலைகழிக்கப்பட்டால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இ மெயில் மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்