பெரியார் கல்வெட்டில் உள்ள வாசகங்களை நீக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

பெரியார் சிலையின் கீழ் பொறிக்கப்பட்டுள்ள "கடவுள் இல்லை" போன்ற வாசகங்களை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பெரியாரின் சிலைகளுக்கு கீழ் உள்ள கல்வெட்டில் கடவுள் இல்லை, கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், அதுபோன்ற வாசகங்களை பெரியார் எந்த காலத்திலும் சொல்லவில்லை என்பதால் அந்த வாசகங்களை கல்வெட்டில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெரியார் உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே சிலை வைத்து, இதுபோன்ற வாசகங்கள் பொறித்த பல கல்வெட்டுகளையும் அவரே திறந்து வைத்துள்ளார் என்றும் அதற்கான ஆதாங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், இதுபோன்ற வாசகங்களை பெரியார் பேசிய ஆதரங்கள் உள்ளன எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்