50,000 ரூபாயை ஆசிரியர்களிடம் ஒப்படைத்த ஏழை மாணவிகள் வார்த்தைகள் மெய் சிலிர்க்க வைக்கிறது.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ளது புங்கனூர் கிராமம். இங்கு 68 ஆண்டுகளாக இயங்கிவருகிறது அரசு உதவிபெறும் புனித வளனார் தொடக்கப் பள்ளி. இலவச வாகன வசதி இருப்பதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை, இங்கு படிக்க வைக்கிறார்கள்.அந்த வகையில் பள்ளியிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலக்காடு தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளி அர்ஜுனன் - ராஜலெட்சுமி ஆகியோரின் மகள் மதுஶ்ரீ மற்றும் பெயின்டர் ராமன் - நல்லம்மாள் ஆகியோர் மகளான கனிஷ்கா உள்ளிட்டோர் இந்தப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவருகிறார்கள்.நேற்று ஆசிரியர் தினம் என்பதால், பள்ளி நிர்வாகம் மக்களுக்கு ஏதாவதஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர். அதையடுத்து தூய்மை பாரதம் இயக்கம் மூலம், பள்ளி இருக்கும் புங்கனூர் கிராம பொதுமக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஆசிரியர்கள், மாணவர்களை வரிசையாக அழைத்துக்கொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.மாணவர்கள் வகுப்பு ரீதியாக வரிசையில் செல்ல, சுகாதாரம் மற்றும்தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடி நடந்து சென்றனர். பேரணி தொடங்கிய கொஞ்சம் தூரத்தில் மாணவிகள் கனிஷ்கா மற்றும் மதுமிதா ஆகியோர் சாலையோரத்தில் 500 ரூபாய் பணம் கட்டு ஒன்று கிடப்பதைப் பார்த்தனர். சட்டென அந்தப் பணத்தை எடுத்த மாணவிகள், ஆசிரியை கிறிஸ்டியிடம் ஒப்படைத்தனர். பணத்தை ஒப்படைக்கும் மாணவிகள் உடனே அவர், 500 ரூபாய் தாள்கள் அடங்கிய அந்தப் பணக் கட்டில் 50,000 ரூபாய் இருந்ததை எண்ணிப் பார்த்ததும், பணத்தை அப்பகுதியில் உள்ள கனரா வங்கியிலிருந்து எடுத்துச் செல்லும்போது யாரோ, பணத்தைத் தவறவிட்டதை உணர்ந்தார். இதுகுறித்த தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியை மெட்டில்டா ஜெயராணியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் ஆசிரியர் மாணவிகளை பாராட்டும் கல்வி அதிகாரிகள்தொடர்ந்து பணத்தைப் பள்ளியின் தாளாளர் செபாஸ்டின் மற்றும் தலைமையாசிரியையிடம் மாணவிகள் மதுஶ்ரீ மற்றும் கனிஷ்கா ஆகியோர் ஒப்படைத்தனர். தகவலறிந்த பலரும் மாணவிகளை நேரில் வந்து பாராட்டி வருகிறார்கள். இன்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மருதநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து மாணவிகளுக்கு சால்வையணிவித்து கௌரவப்படுத்தினார்கள். நம்மிடம் பேசிய பள்ளியின் தலைமையாசிரியர் மெட்டில்டா ஜெயராணி, ``மிகவும் கஷ்டப்படும் குடும்பச் சூழ்நிலையை கொண்ட அந்த மாணவிகள், கீழே கிடந்த பணத்தை எடுத்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்தது மிகப் பெரிய விஷயம். அவர்களின் நேர்மை எங்களைப் பெருமை அடைய வைத்துள்ளது. அந்தப் பணத்தை மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். கடந்த 68 வருடங்களாக இதுபோன்ற ஒழுக்கம் உள்ள மாணவர்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம் என நினைக்கும்போது மனநிறைவாக உள்ளது” என்றார். மாணவிகள் நம்மிடம், ``பணம் கிடந்ததைப் பார்த்ததும், யாரோ ஒருத்தர் பணத்தை தவறவிட்டுட்டாங்கனு மட்டும் தோணுச்சு. பணத்தை தொலைச்சிட்டு அவங்க மனசு என்ன பாடுபடும். உடனே அந்தப் பணத்தை எங்க டீச்சரிடம் கொடுத்து உரியவரிடம் கொடுத்துடணும்'னு மட்டும் தோணுச்சு. அதான் பணத்தை எடுத்த நாங்கள் உடனே டீச்சர்க்கிட்ட கொடுத்தோம்” என்றார்கள் மழலை மொழியில்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்