காவல் அதிகாரியை பழிவாங்கும் நோக்கில் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.10000 அபராதம்

காவல்துறை அதிகாரியை பழிவாங்கும் நோக்கில் புகார் அளித்த பெண் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டுராம்பட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 2016ம் ஆண்டு ஆட்டோவில் பயணித்தவரிடம் 5 கிராம் தங்க மோதிரத்தை கடத்திய வழக்கில், காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் தனது கணவனை பொய் வழக்கில் கைது செய்ததாக குற்றம்சாட்டிய பழனியின் மனைவி கோமதி, கிண்டி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளருக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும் புகாரை தள்ளுபடி செய்து கோமதிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதனை கிண்டி காவல் ஆய்வாளருக்கு வழங்குமாறும் உத்தரவிட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்