புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் விரைவில் அமல்

புதிய மோட்டார் வாகன சட்டம் விரைவில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ளதால் போக்குவரத்து விதிகளை அனைத்து காவலர்களும் கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்துமாறு சென்னை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு போக்குவரத்து கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் உள்ள இணை ,துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கு போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 210-பி அடிப்படையில், மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள்,அச்சட்டத்தை மீறி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதங்கள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதால், அனைத்து இணை, துணை மற்றும் உதவி ஆணையர்கள், தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்களை,வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக போக்குவரத்து விதிகளை பின்பற்ற வலியுறுத்துமாறு தெரிவித்துள்ளார். மீறினால் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கும் படியும் அந்த உத்தரவில் அறிவுறுத்தி இருக்கிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்