கபாலீஸ்வரர் கோயிலில் சிலை மாற்றப்பட்ட வழக்கு - திருமகள் ஜாமீன் ரத்து

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளின் ஜாமீனை ரத்து செய்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புன்னை வனநாதர் சன்னதியில் சிவனுக்கு பூஜை செய்வது போல இருந்த மயில் கல் சிலை, 2004ம் ஆண்டு மாயமான வழக்கில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த திருமகளிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது திருமகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதாக நீதிபதி தெரிவித்தார். எனவே இவ்வழக்கில் அடுத்தகட்டமாக திருமகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்