ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய எஸ்.பி.ஐ. திட்டம்

மும்பை, நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து டெபிட் கார்டுகளையும் (ஏடிஎம் கார்டு) நீக்கி விட்டு யோனோ கேஷ் என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த யோனோ கேஷ் என்ற அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். பணம் எடுக்க வேண்டும் என்றால் யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட செல்போனின் நம்பருக்கு ஒரு எண் அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஏ.டி.எம்.களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்ட் எண்ணை பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை நாடு முழுவதிலும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் தற்போது பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்