வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா

29ம்தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் நாகை : வேளாங்கண்ணி உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கீழை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படுகிறது. இப்பேராலய ஆண்டு திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத்திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மாதாவின் சொரூப கொடியினை தஞ்சை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியினை புனிதம் செய்து கொடியேற்றுகிறார். விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், மராட்டி, கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெறும். அன்னை மாதாவின் ஆண்டு திருவிழா பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து, காவி உடை அணிந்து அன்னையின் ஆசிபெற நடை பயணமாக வருகை தருவார்கள். அனைவரையும் அன்னையின் ஆசி பெற வரவேற்கிறோம்.எனவே, பக்தர்கள் ஜாதி, மதம், மொழி, இனம் கடந்து தங்களது துயரங்களை போக்கும் வகையில் மாதாவுக்கு நன்றி செலுத்துவதற்காக வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகின்றனர். மேலும் சமூக மேம்பாடு அடைவதற்கு இந்த ஆண்டு திருவிழாவை காண வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க பேராலயம் தயாராக உள்ளது. இந்த ஆண்டு திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், பேராலயம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் தங்குவதற்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். பலத்த போலீஸ் பாதுகாப்பு வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் எஸ்பி ராஜசேகரன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி முருகவேலு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டும் இன்றி வஜ்ரா வாகனம் மற்றும் ஈகிள் வாகனம் மூலம் தொடர்ந்து அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர். வெடிகுண்டு பரிசோதனை பேராலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் பேராலயம் நுழைவு வாயில் முதல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்களும், கடற்கரை ரோந்து போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயிலின் அனைத்து நுழைவு வாயில்களில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது. ரயில் மூலம் வரும் பணிகளை கண்காணிக்கவும், சோதனை செய்யவும் ரயில்வே ஸ்டேசன்களிலேயே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்