லண்டன் சென்ற முதல்வர் பழனிச்சாமி.. விமான நிலையத்திலேயே நடந்த நீட் போராட்டம்!

லண்டன்: லண்டன் விமான நிலையத்தில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதல்வர் பழனிச்சாமி முதல்முறையாக மூன்று நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மொத்தம் 14 நாட்கள் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக நேற்று காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் லண்டன் விமான நிலையத்தில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இவர்கள் முதல்வருக்கு எதிராக பரப்புரை ஆர்ப்பாட்டம் செய்தனர். புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டது ஆகியவற்றை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் செய்தனர். அதே சமயம் முதல்வரையும், சுகாதாராத்துறை அமைச்சரையும் வரவேற்க சிலர் காத்திருந்தனர். எல்லா பயணிகளும் வெளியேறிய பின் முதல்வர் கடைசியாக அங்கு வந்தார். முதல்வரும் சுகாதாரத்துறை அமைச்சரும் வேறு மாற்று வழியில் தனியாக அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து கருத்து பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட அமைப்பினர், தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் வந்தோம். புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு ஆகவே எங்கள் கோரிக்கை. புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை எடுத்துரைக்கவே இந்த போராட்டம் என்று குறிப்பிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்