சூடான போண்டா கிடைக்காததால் போலீசில் புகார்- டீக்கடைக்காரரை எச்சரித்த போலீஸ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலையில் பிரபலமான டீக்கடை ஒன்று உள்ளது. நேற்று இந்த டீக்கடைக்கு 50 வயது மதிக்கத்தக்க வாடிக்கையாளர் ஒருவர் டீ குடிக்க சென்றார். அப்போது கடையில் டீ குடித்து கொண்டிருந்தவர்களில் சிலர், சூடாக போண்டா சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வாடிக்கையாளர் உடனடியாக கல்லா அருகே நின்று கொண்டிருந்த நபரிடம் சென்று, சூடாக ஒரு போண்டா தருமாறு கேட்டு இருக்கிறார். உடனே அந்த நபர் ஒரு போண்டாவை எடுத்து, ஒரு துண்டு காகிதத்தில் வைத்து கொடுத்துள்ளார். அந்த போண்டாவை வாங்கிய வாடிக்கையாளருக்கு அது ஆறிப்போனதால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் ஏற்பட்டது. போண்டாவை கையில் வாங்கிய அவர் “என்னப்பா.., போண்டா சூடாவே இல்லை?' என்று கேட்டு இருக்கிறார். அதற்கு கடைக்காரர் நீங்கள் வரும்போதெல்லாம், போண்டா சுட்டா தரமுடியும் என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார். இதனால் கடைக்காரருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடைக்காரர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. உடனே அருகே இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, வாடிக்கையாளரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆனால் வாடிக்கையாளர் தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சூடாக போண்டா தராத, டீக்கடைக்காரர் மீது புகார் கொடுத்தார். போலீசார் டீக்கடைக்காரரை வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் வாடிக்கையாளரை சமாதானப்படுத்தி, டீக்கடைக்காரரை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்