மேலூரில், திரையரங்கு ஒன்றில் திடீரென தீப்பற்றியதால் படம் பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூரில், திரையரங்கு ஒன்றில் திடீரென தீப்பற்றியதால் படம் பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலூரின் மையப்பகுதியில் கணேஷ், கணேஷ் பாரடைஸ் மற்றும் கணேஷ் டீலக்ஸ் ஆகிய 3 திரையரங்குகள் அமைந்துள்ளன. விடுமுறை நாளான இன்று மதியம் படம் பார்க்க பலர் குடும்பத்துடன் திரையரங்குக்கு வந்திருந்தனர். இந்தநிலையில் கணேஷ் பாரடைஸ் திரையரங்கில் 2வது காட்சியாக 'கென்னடி கிளப்' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது, திரையரங்கின் முதல் தளத்தில் இருந்த குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதனைக்கண்ட திரையரங்கு ஊழியர்கள், உடனடியாக திரைப்படத்தை நிறுத்தி, படம் பார்க்க வந்திருந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் வெளியேற்றினர். பலரும் அலறி அடித்து அரங்கை விட்டு வெளியேறியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதனிடையே தகவல் அறிந்து வந்த மேலூர் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், திரையரங்கின் முதல் தளத்திலிருந்த ஏ.சி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தீவிபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இதில் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்