சேலத்தில் அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
சேலத்தில் அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். பள்ளப்பட்டி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் சேலம் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 6 மணியளவில் அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.இந்நிகழ்ச்சிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை ஏற்கிறார். இந்தப் பொருட்காட்சியில் 35க்கும் மேற்பட்ட அரசு அரங்குகள் மற்றும் தனியார் துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. சேலத்தில் இன்று அரசு பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி