ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் ரூ.1000 அபராதம்: சென்னையில் நடைமுறைப்படுத்தியது போக்குவரத்து போலீஸ்

சென்னை: ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளிடம் புதிய மோட்டர் வாகன சட்டத்தின் படி போக்குவரத்து போலீசார் நேற்று முதல் ரூ.1000 அபராதம் வசூலித்தனர். மோட்டர் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அபராத தொகை ரூ.100ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வில்லை என்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கடந்த 7ம் தேதி முன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி நேற்று முதல் மாநகரம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டி வந்த நபர்கள் மீது ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், இரு சக்கர வாகனத்தில் பின்னால் ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களிடமும் அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னையில் காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உட்பட நகரம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய வந்த நபர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்