உறவினர்கள் கண் எதிரே பயங்கரம்.. கழுத்தில் துப்பாக்கியால் சுட்டு திமுக மருத்துவரணி அமைப்பாளர் தற்கொலை

சேலம்: நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சுல்தான்பேட்டை பகுதியில் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவர் ஆனந்த். இன்று மதியம் தனது சொந்த ஊரான பரமத்தி வேலூர் அடுத்த செங்கப்பள்ளியிலுள்ள, தனது பண்ணை வீட்டு தோட்டத்தில் நாட்டுத் துப்பாக்கியை கழுத்துப் பகுதியில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து உறவினர்கள் கூறியது: காலை வழக்கம்போல் மருத்துவமனையில் ஆனந்த் வெளிநோயாளிகளை பார்வையிட்டுள்ளார். மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று பெண்களுக்கு எப்போதும் மாதம் 5ம் தேதி சம்பளம் தருவார். ஆனால் இன்று மாத சம்பளத்தை முன்கூட்டியே கூப்பிட்டு கொடுத்தார். எதற்காக சார் முன்கூட்டியே சம்பளம் தருகிறீர்கள் என்று அந்த பெண்கள், ஆனந்த்திடம், கேட்டதற்கு இப்போது இருந்தாலும் நான்தானே தருகிறேன். இப்பொழுது முன்கூட்டியே தருகிறேன் என்று கூறி விட்டு, இனிமேல் வெளி நோயாளிகளை நான் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு பரமத்திவேலூர் அடுத்துள்ள செங்கப்பள்ளியிலுள்ள எனது பண்ணை வீட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். மருத்துவமனையிலிருந்து தனது காரில் செல்லும்போது மருத்துவர் ஆனந்த் தனது பெரியப்பா மகன் முரளிக்கு போன் செய்து, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் கூறிவிட்டு செல்போன் அழைப்பை, கட் செய்து உள்ளார். தகவலை கேட்ட முரளி தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு, மருத்துவத்தின் பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். தனது உறவினர்கள் வருவதை கண்ட ஆனந்த், உடனே, தனது கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை கழுத்தில் வைத்து உறவினர்கள் கண் முன்னாடியே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே உறவினர்கள் அருகாமையில் உள்ள ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து, விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆனந்த்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு மற்றும் பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனந்த் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளராக செயலாற்றி வந்தவர் என்பது, குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்