`வீட்டில் இருந்தபடியே ஆர்.சி.எச். அட்டைகள் பதியலாம்!' - கர்ப்பிணிப் பெண்களுக்கு அசத்தல் சேவை

கர்ப்பிணிப் பெண்களுக்கு அசத்தல் சேவைபிறப்புச் சான்றிதழ், மகப்பெறு சான்றிதழ் பெற ஆர்.சி.எச். அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதைப் பெறுவது எப்படி? என்கிற குழப்பத்துக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். அமைச்சர் பிள்ளையாக இருந்தாலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்கிற கட்டாயப் பதிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதன்மூலம், குழந்தை பிறப்பை ஆவணப்படுத்துவதுடன், தாய்மார்களின் உடல்நலம், அவர்களுக்கான மகப்பேறு திட்டங்களைச் சிறப்பாக செயலாற்றிட முடியும் என தமிழக அரசு கருதுகிறது. கர்ப்பம் தரித்தவுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்யும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆர்.சி.எச். அடையாள எண் வழங்கப்படுகிறது. கர்ப்பக் காலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், ஆர்.சி.எச். அட்டைகள் பெறுவது அவசியமானதாகும். சுலபமாக இதைப் பெறுவது எப்படி என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம ``கர்ப்பத்தைப் பதிவு செய்ய பல வழிமுறைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அரசு இ-சேவை மூலமாகவும், 102 கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும் கர்ப்ப விவரங்களைப் பதிவுசெய்யலாம். வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கர்ப்ப விவரங்களைப் பதியலாம். வீட்டில் இருந்தபடியே, https://picme.tn.gov.in/picme_public என்ற இணையதள முகவரி மூலமாகவும் கர்ப்ப விவரங்களைப் பதிவு செய்யலாம். கணவரின் ஊரில்தான் கர்ப்ப விவரங்களைப் பதிவு செய்ய முடியும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. கடந்த ஆறு மாதங்களாக கர்ப்பிணிப் பெண் எந்த ஊரில் தங்கியிருக்கின்றாரோ, அந்த ஊரில் பதிவு செய்தாலே போதுமானது. பதிவு செய்தவுடன், கர்ப்பிணிப் பெண்களை நேரில் வந்து பார்த்து கிராம/நகர சுகாதார செவிலியர் கர்ப்பத்தை உறுதி செய்துகொள்வார். இதன்பின்னர் ஆர்.சி.எச். அட்டைகள் வழங்கப்படும்.தாய், சேய் உடல்நலத்தைப் பேணுவதில் தொடர்ச்சியான கண்காணிப்பு முக்கியம். இதைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித்தாய் பிரசவத்துக்காக தாய் வீடு சென்றாலும், அங்கும் அனைத்து கர்ப்பக் கால சேவைகளும் தொடர்ந்து கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றன


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்