இனி சட்டைப் பையில்..!சாட்சி

காவல்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீசாரின் உடையில் கேமரா பொருத்தும் திட்டம் நாளை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டால் வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதேபோல் வாகன ஓட்டிகளிடம் போலீசார் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் எழுந்தன. இதை அடுத்து, போக்குவரத்து போலீசாரின் உடையில் மைக்ரோஃபோனுடன் கூடிய கேமரா பொருத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக 200 "உடல் இணை கேமராக்கள்" வாங்கப்பட்டுள்ளன. அந்தக் கேமராக்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களின் உடையில் பொருத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்க உள்ளார். பணி நேரம் முழுவதும் கேமரா இயங்கிக் கொண்டே இருக்கும். கேமராவில் பதிவாகும் காட்சிகள் பின்னர் ஆய்வு செய்யப்படும். இதன் மூலம், விதிமீறலில் ஈடுபடுவோரை போக்குவரத்து போலீசார் பிடித்து விசாரிக்கும் போது தகராறு நேரும் பட்சத்தில் யார் மீது தவறு என்பதை கேமராவில் பதிவாகும் காட்சிகள் காட்டிக் கொடுத்து விடும். தொடக்கத்திலேயே குற்றம் நிரூபிக்கப்பட்டு விடும் என்பதால் நேரம் மற்றும் பணம் மிச்சம். போலீசார் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் குறையும். குற்றச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகளின் திறன் ஆய்வு செய்யப்படும் என்பதால், திறன் மேம்படும். அதேவேளையில், உடல் இணை கேமராக்களால் தொ உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்று சில அதிகாரிகள் கூறி வருகின்றனர். மேலும், குற்றங்கள் குறித்து போலீசாரிடம் தெரிவிக்கும் சாட்சிகளை அடையாளம் காட்டிக் கொடுத்து விடும் என்பதும் அவர்களது கவலையாக உள்ளது. இதுஒருபுறமிருக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கென்று ஏடிஜிபி ரவி தலைமையில் தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கு மாவட்டந் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். மகளிர் காவல் நிலையங்களுடன் இணைந்து இந்தப் பிரிவு செயல்படும். இந்தப் பிரிவுக்கென்று அம்மா பெட்ரோல் வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் பிங்க் நிறத்துடன் கூடிய டொயொட்டோ இன்னோவா கார்கள் வழங்கப்படுகின்றன. கார்களை இன்னும் சில வாரங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக மகளிர் போலீசார் இனி ரோந்துப் பணியில் ஈடுபடுவர். இந்தத் திட்டம் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்