"குளத்த காணோம்' என்கிற கதையாய், குளங்கள்

பரந்து விரிந்த குளம்; ததும்பி நிற்கும் தண்ணீர்; அதில் கால்நனைத்து நிற்கும் கொக்கு, நாரை; குளக்கரையை சுற்றி பசுமை போர்வையாய் மரங்கள்; அவற்றின் கிளைகளை, ஊஞ்சலாக்கி கிரீச்சிடும் பறவையினம் என, இயற்கையின் கொடையில், மனம் லயிக்காதவர் இருக்க முடியாது... அந்த வரிசையில், குளம் என்கிற அடையாளம், தண்ணீர் தேவையில் தன்னிறைவை வழங்கி, குலம் காப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.ஆனாலும், பல இடங்களில், 'குளத்த காணோம்' என்கிற கதையாய், குளங்கள் பல, புல், புதரால் சூழப்பட்டும், நீர்வழித்தடங்கள் தடைபட்டும் கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பதில், முனைப்புக்காட்ட துவங்கியிருக்கிறது அரசு. அப்பணியை மேற்கொள்ளும் தன்னார்வ அமைப்பினருக்கு, முன்னுரிமை கொடுக்கிறது மாவட்ட நிர்வாகம். அந்த வகையில், அவிநாசியின் மையப்பகுதியில், 270 ஏக்கர் பரப்பில், பரந்து விரிந்துள்ள சங்கமாங்குளத்தை, சுத்தம் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றனர் உள்ளூரில் உள்ள தன்னார்வ அமைப்பினர்.இம்முயற்சியை குளம் காக்கும் இயக்கத்தினர் முன்னெடுக்க, 20க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்பினர், கைகோர்த்திருக்கின்றனர். துவக்க நாளில், 15க்கும் மேற்பட்ட 'பொக்லைன்' வாகனங்கள் அணிவகுத்து வந்து, குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டன.பணியில் தென்பட்ட வேகம், அதில் இருந்த விவேகம், பொதுமக்கள், தொழில திபர்கள், கல்வி நிறுவனத்தினர் என, பலரையும் ஈர்க்க, அவர்கள் நன்கொடையால், ஊக்குவிக்க துவங்கினர். வாகன செலவு, உணவு போன்ற தினசரி செலவை, வந்து சேர்ந்த நன்கொடைகள் ஈடுசெய்ததன் விளைவாக, பணியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.ஆம், குளத்தை மட்டுமே சுத்தம் செய்வது என்ற திட்டமிடல் மாற்றப்பட்டு, அதில் உள்ள நீர்வழித்தடத்தையும் சுத்தம் செய்வது என்ற, முன்னெடுப்புக்கு பணி முன்னேறியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்