மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.!

தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனிமேல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அட்டையில் மாணவரின் மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு, போன்றவை பெற்றோர் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதற்காக பெரும் குவியலாக அட்டைகள் தேவைப்படுகின்றன. இந்நிலையை மாற்ற பெற்றோரின் இமெயிலுக்கு நேரடியாக பதிவு அட்டை விவரத்தை அனுப்பிவைக்கப்படுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளிலேயே அதனை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த சேவையை வழங்கக் கூடிய நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இவை பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சின்மயா வித்யாலயா போன்ற சில கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே மாணவர்களின் விவரங்களை இணையவழியாக பதிவேற்றுகின்றன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்