அத்துமீறிய வருண்குமார் ஐ.பி.எஸ்பத்திரிகையாளர்களின் . பாதுகாவலர் டி.ஜி.பி.-ஜே.கே.திரிபாதி
'காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்வின் இறுதிநாளில் செய்தி சேகரிக்கச் சென்ற ஜெயா டி.வி. செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்திரசேகர் இருவரையும் தாக்கி, காமிராவை உடைத்து முறை தவறி நடந்து கொண்டார் காவல் துறையின் கரும்புள்ளியான எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ். இது சம்மந்தமாக வருண்குமார் ஐ.பி.எஸ்.ஸின் அத்து மீறல், அடாவடித்தனம் தொடர்பாக புகாரளி க் க டி .ஜி .பி. அலுவலகம் சென்ற பத்திரிகையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பத்திரிகையாளர்களையும் கனிவோடு அணுகினார் தமிழக டி.ஜி.பி., ஜே.கே.திரிபாதி. வருண்குமார் சிறப்பு அதிகாரி சாம்சன் எஸ்.பி. நியமனம்!மீது புகாரளிக்க வந்த பத்திரிகையாளர்களிடம், காவல் துறை - பத்திரிகையாளர் ஒற்றுமை குறித்து பேசியதுடன், தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தரும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார். வருண்குமார் ஐ.பி.எஸ். மீதான புகாரை கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்தமுரளி விசாரிப்பார் என்றதுடன் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்திரசேகர் இருவரின் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்து அவர்களுக்கு உரிய உதவிகள் செய்கிறேன் தமிழக காவல்துறை வரலாற்றில் டி.ஜி.பி. திரிபாதி அவர்கள் ஒரு மைல்கல். பெரும் பொக்கிஷம் என்றே கூறலாம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் காவல் துறையினர் நல்லுறவு மேம்பட, உடனடியாக ஒரு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சாம்சன் எஸ்.பி, அவர்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசி எண். 9498111118 தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிகை அமைப்புகளின் தலைவர்கள், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன், சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன், அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய தலைவர் அஸ்வத்துல்லா, தமிழ்நாடு பத்திரிகையாளர் உழைக்கும் சங்கத்தின் தலைவர் சகாயராஜ், டைம்ஸ் நைவ் தொலைக்காட்சியின் சபீர், மற்றும் ரஜினி, விமலேஷ்வரன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்படி பத்திரிகையாளர்களிடம் கனிவுடன் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி பதிலளித்த மன நிறைவோடு இந்த சந்திப்பு முடிந்த நிலையில், மீண்டும் தனது ஆணவத்தை, மனக்கோளாறை, அணுகுமுறை கோளாறை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தி உள்ளார் வருண்குமார் ஐ.பி.எஸ். அதில் யானையை பார்த்து குறைக்கும் நாய்கள் : யானை கண்டுகொள்ளாவிட்டாலும் நாய்கள் குறைக்கின்றன என மறைமுகமாக காவல் துறை உயரதிகாரிகளை இழிவுபடுத்தும் பொருளில் பழமொழி ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பிய வருண்குமார், இப்போது தனது துறை உயர் அதிகாரிகளை பற்றியே சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது காவல் துறைக்கு பெரும் களங்கம். இப்படி ஒவ்வொரு அதிகாரியும் பதிவிட்டால் எங்கு போய் முடியுமோ? அதுசரி, இதில் யார் யானை, யார் நாய் என்பதையும் வருண்குமார்தான் தெளிவுபடுத்த வேண்டும். தெளிவுபடுத்துவாரா? மேலும் வளரும் ஐ.பி.எஸ். ஆனவருண்குமார், காவல் துறையில் இன்னும் பல படிகளை தாண்டவேண்டும். எனவே இனி வரும் காலங்களில் அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து பத்திரிகையாளர்களின் வேண்டுகோளும்கூட. காவல்துறை தலைவர் பத்திரிகையாளர்கள் நலன் கருதி சிறப்பு அதிகாரியை நல்லெண்ண அடிப்படையில் நியமித்து அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளது நான்காம் தூணுக்கு பெருமைதான். அதே சமயம் நான்காம் தூண் என்று சொல்லக்கூடிய பத்திரிகையாளர்களாகிய நாமும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து நமது கண்ணியத்தையும் காவல் துறையின் பெருமையையும் காப்பாற்ற வேண்டும். அதே சமயம் எழுத தெரியாதவன் எல்லாம் நான் ஒரு பத்திரிகையாளன் என்றும் தெருத்தெருவிற்கு பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் சங்கம் வைத்து ஏமாற்றுபவர்களுக்கு எல்லாம் பணம் வாங்கி கொண்டு, ஐ.டி. கார்டு விற்பவர்களை அங்கீகாரம் பெற்ற மூத்த பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள் அடையாளம் கண்டு களையெடுக்கவேண்டும். பத்திரிகையே நடத்தாமல் தங்களது இன்ஷியலையே வைத்து வியாபாரம் செய்து கொண்டு 500 பிரதிகளை அச்சடித்து அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் கொடுத்து உலா வரும் டுபாக்கூர்களுக்கெல்லாம் நேர்மையான பத்திரிகையாளர் யாரும் அடைக்கலம் கொடுத்து நமது கண்ணியத்தையும் இழக்காமல் இருக்க வேண்டும்! மேற்படி இதுவரை இல்லாத யாரும் செய்யாத எந்த காவல்துறை இயக்குநருக்கும் தோணாத ஒரு காரியத்தை தற்போது தமிழக காவல்துறை இயக்குநர் ஜே.கே.திரிபாதி நமது தமிழக பத்திரிகையாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செய்துள்ளார். அவரது பணி மென்மேலும் சிறக்க நமது இதழின் சார்பாக பாராட்டுக்கள்!