கள்ளச்சாராயம்... போன் செய்தால் ஃப்ரீ டோர் டெலிவரி

கடலூர் மாவட்டத்தில், "ஃபோனில் ஆர்டர் கொடுத்தால் டோர் டெலிவரி இலவசம்" என்று இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே எஸ். நாரையூர், வள்ளி மதுரம், வடபாதி, பனையந்தூர் ஆகிய கிராமங்களில் பாக்கெட் சாராய வியாபார விற்பனை அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் தங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களிடம் சாவகாசமாக சாராய பாக்கெட்டுக்களை விற்பனை செய்கின்றனர். இதற்காக இவர்கள் எந்த மறைவான இடத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக இருசக்கர வாகனத்தின் பெட்டிகள், முன்புற பைகள் ஆகியவற்றில் சாராய பாக்கெட்டுக்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 250 மில்லி சாராயம் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை எந்நேரமும் விற்கப்படுவதால் இந்த பகுதியை தேடி வரும் குடிமகன்கள் சாலையிலேயே அமர்ந்து குடித்து செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பெண்கள் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையை அரசும், காவல்துறையினரும் தடுக்கக் கோரி கடந்த சுதந்திர தினத்தன்று எஸ். நரையூர் கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் எழுதிய மையின் ஈரம் காய்வதற்குள், போன் செய்து ஆர்டர் கொடுத்தால் டோர் டெலிவரி இலவசம் என்று அதிரடி அறிப்பை வெளியிட்டுள்ளனர் கள்ளச்சாராய வியாபாரிகள்.இன்றைய தலைமுறையை மட்டுமின்றி நாளைய தலைமுறையையும் அழிக்கும் கள்ளச்சாராய விற்பனையை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்